/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வசிஷ்ட நதி - கைக்கான்வளவு நீரோடை இணைப்பு திட்டம்; இ.பி.எஸ்.,க்கு பாராட்டு
/
வசிஷ்ட நதி - கைக்கான்வளவு நீரோடை இணைப்பு திட்டம்; இ.பி.எஸ்.,க்கு பாராட்டு
வசிஷ்ட நதி - கைக்கான்வளவு நீரோடை இணைப்பு திட்டம்; இ.பி.எஸ்.,க்கு பாராட்டு
வசிஷ்ட நதி - கைக்கான்வளவு நீரோடை இணைப்பு திட்டம்; இ.பி.எஸ்.,க்கு பாராட்டு
ADDED : பிப் 26, 2024 01:45 PM
ஆத்துார்: வசிஷ்ட நதி நீர் பாசன ஆயக்கட்டு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள், ஆத்துாரில் நிருபர்களிடம் கூறியதாவது:
பெத்தநாயக்கன்பாளையம், பாப்பநாயக்கன்பட்டியில், 350 ஏக்கர் பரப்பளவில், 52.49 அடி உயரத்தில் கரியக்கோவில் அணை உள்ளது. இதன் மூலம், 3,600 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. அணை வறட்சி ஏற்படாமல், கூடுதல் தண்ணீர் பெறும் வகையில், வசிஷ்ட நதி - கைக்கான்வளவு நீரோடை இணைப்பு திட்டத்தை செயல்படுத்தும்படி, 30 ஆண்டுகளுக்கு மேல் கோரிக்கை விடுத்து வந்தோம்.
கடந்த, 2021ல், அப்போதைய முதல்வர் இ.பி.எஸ்., இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு, 7.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அரசிதழில் ஆணையும் வெளியிட்டார். 2021 பிப்ரவரியில் முதல்வராக இருந்தபோது, இ.பி.எஸ்., இப்பணியை துவக்கி வைத்தார். தொடர்ந்து, 500 மீட்டர் துாரத்துக்கு சீரான இடைவெளியில், 8 தொட்டி அமைத்து அங்கிருந்து தண்ணீர் வர, 295 மீட்டர் துாரம் கான்கிரீட் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, கரியக்கோவில் அணைக்கு கூடுதல் தண்ணீர் கிடைத்துள்ளது.
இத்திட்டத்தை நிறைவேற்றிய அ.தி.மு.க., பொதுச் செயலரும், எதிர்கட்சி தலைவருமான இ.பி.எஸ்.,க்கு வசிஷ்ட நதி நீர் பாசன ஆயக்கட்டு விவசாயிகள் சங்கம், ஆத்துார், கெங்கவல்லி, ஏற்காடு பகுதியில் உள்ள விவசாயிகள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நாளை (27ல்,) பெத்தநாயக்கன்பாளையத்தில் நடக்கிறது. சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு கூறினர்.

