/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வாழப்பாடி அரசு மருத்துவமனையில் போலீசார் - மருத்துவர் தள்ளுமுள்ளு வாழப்பாடி, நவ. 10-
/
வாழப்பாடி அரசு மருத்துவமனையில் போலீசார் - மருத்துவர் தள்ளுமுள்ளு வாழப்பாடி, நவ. 10-
வாழப்பாடி அரசு மருத்துவமனையில் போலீசார் - மருத்துவர் தள்ளுமுள்ளு வாழப்பாடி, நவ. 10-
வாழப்பாடி அரசு மருத்துவமனையில் போலீசார் - மருத்துவர் தள்ளுமுள்ளு வாழப்பாடி, நவ. 10-
ADDED : நவ 10, 2024 01:32 AM
வாழப்பாடி அரசு மருத்துவமனையில்
போலீசார் - மருத்துவர் தள்ளுமுள்ளு
வாழப்பாடி, நவ. 10-
அயோத்தியாப்பட்டணம், வெள்ளியம்பட்டியை சேர்ந்த பீரோ பட்டறை உரிமையாளர் சரவணன் கொலை வழக்கில், 7 பேரை, காரிப்பட்டி போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு உடல் பரிசோதனை செய்ய, நேற்று இரவு, 8:00 மணிக்கு போலீசார், வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு, போலீசாருக்கும், மருத்துவர் செந்தில்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளுவாக மாறியது.
இதுகுறித்து வாழப்பாடி போலீசார் கூறியதாவது:
கொலை வழக்கில் சிக்கிய, 7 பேருக்கு உடல் பரிசோதனை செய்ய, காரிப்பட்டி போலீசார், வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
அங்கு பணியில் இருந்த மருத்துவர் செந்தில்குமார், 7 பேருக்கு உடல் பரிசோதனை செய்ய முடியாது என தெரிவித்தார். இதனால் போலீசாருக்கும், செந்தில்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, குற்றவாளிகளுக்கு உடல் பரிசோதனை செய்ய கேட்டபோது, மருத்துவர் செந்தில்குமார் மறுத்ததை, மொபைல் போனில் வீடியோ எடுத்தனர். அவர்களை, மருத்துவரும் வீடியோ எடுத்தார். அப்போது மருத்துவர், போலீசாரின் மொபைல் போனை பிடுங்கியதோடு தள்ளிவிட்டார்.
இவர் ஏற்காட்டில் பணியில் இருந்தபோது, போதையில் நோயாளிகளிடம் தகாத வார்த்தையில் பேசி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மருத்துவர் செந்தில்குமார் கூறுகையில், ''போலீசார் அழைத்து வந்த, 7 பேரை, உடல் பரிசோதனை செய்வது சிரமம் என தெரிவித்தேன். பின் உடல் பரிசோதனை செய்து தருவதாக தெரிவித்தேன். அப்போதும் போலீசார், மொபைல் போனில் வேண்டுமென்று படம் எடுத்தனர். பின் பணியில் இருந்த என்னை தாக்கினர்,'' என்றார்.