/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இலவச வீட்டுமனை கேட்டு வி.சி.,நிர்வாகி உருளுதண்டம்
/
இலவச வீட்டுமனை கேட்டு வி.சி.,நிர்வாகி உருளுதண்டம்
ADDED : டிச 16, 2025 08:07 AM
சேலம்: சேலம், மேச்சேரி அடுத்த மல்லிகுந்தத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன், 52. இவர், மேட்டூர் சட்டசபை தொகுதி வி.சி., துணை செயலராக உள்ளார். நேற்று மதியம், 12:10 மணிக்கு கலெக்டர் அலுவலகம் வந்த இவர், திடீரென தரையில்படுத்து உருண்டபடி, நடவடிக்கை எடு, நடவடிக்கை எடு என கோஷமிட்டார். போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.
அதன்பின் அவர் கூறியதாவது: மல்லிகுந்தம், பள்ளிப்பட்டி ஊராட்சி ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச வீட்டுமனை கேட்டு 2021ல், இருந்து பலமுறை மனு கொடுத்து மன்றாடி வருகிறேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. 1994ல், ஜெ. ஆட்சியில் வழங்கிய வீட்டுமனை பட்டாவுக்கு, இ.பட்டா வழங்கி சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உதவிட வேண்டும். இவ்வாறு கூறினார். அதன்பின், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு சென்றார்.

