ADDED : ஜன 19, 2025 01:13 AM
சேலம் மாவட்டம், தலைவாசல், சிறுவாச்சூரை சேர்ந்தவர் பாலாஜி, 19; ஆத்துார் அரசு கல்லுாரியில், பி.பி.ஏ., படிக்கிறார். கடந்த, 16ல் சிறுவாச்சூர் மாரியம்மன் கோவில் பகுதியில் நடந்து சென்றபோது, அதே பகுதி கார் டிரைவர் கதிரவன், 22, பாலாஜியை தாக்கியுள்ளார்.
மாணவரது உறவினர்கள் தட்டிக்கேட்க, இரு சமூகத்தினர் இடையே தகராறாக மாறியது. பாதுகாப்பு கருதி, ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். பாலாஜி புகார்படி, வன்கொடுமை உட்பட நான்கு பிரிவுகளில், தலைவாசல் போலீசார் வழக்குப்பதிந்து, கதிரவனை நேற்று கைது செய்தனர்.
மேலும் இருவர் மீது நடவடிக்கை கோரி, மதியம் ஆத்துார் அரசு மருத்துவமனை முன், வி.சி., கட்சியினர், மாணவரது உறவினர்கள், மறியலில் ஈடுபட்டனர். ஆத்துார் டவுன் போலீசார் பேச்சு நடத்திய பின் அனைவரும் கலைந்தனர்.