ADDED : ஏப் 22, 2026 02:43 AM
அ நிறம் | அளவு
ஓமலுார்: ஓமலுார் தொகுதியில், 362 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. 38 மண்-டல தேர்தல் அலுவலர்கள் உள்ளனர். அவர்கள் மின்னணு ஓட்-டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டுச்சாவடிக்கு தேவையான பொருட்-களை கொண்டு செல்ல வேண்டும்.
அதற்கு தேவையான வாக-னங்கள் நேற்று ஓமலுார் தாலுகா அலுவலகம் கொண்டு வரப்-பட்டு, அந்தந்த மண்டல அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்-டன. இதனால் தாலுகா அலுவலகம் முன் கார், மினி வேன் நிரம்-பியிருந்தன. இன்று மண்டல அலுவலர்கள், வாகனத்துடன் ஏ.வி.எஸ்., கல்லுாரியில் உள்ள ஸ்டிராங் ரூம் சென்று, மின்னணு ஓட்டு இயந்திரங்களை பெற்று, ஓட்டுச்சாவடிக்கு செல்கின்றனர்.
