/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வரி செலுத்தாமல் இயக்கினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும்'
/
வரி செலுத்தாமல் இயக்கினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும்'
வரி செலுத்தாமல் இயக்கினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும்'
வரி செலுத்தாமல் இயக்கினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும்'
ADDED : ஜூன் 18, 2025 01:32 AM
ஆத்துார்,
ஆத்துார் வட்டார போக்குவரத்து அலுவலர்(ஆர்.டி.ஓ.,) தாமோதரன் அறிக்கை:
ஆத்துார், வாழப்பாடியில் உள்ள சரக்கு வாகனங்கள், கடந்த மார்ச், 30ல், வரி செலுத்தாமல் அதிகளவில் உள்ளன. உரிமையாளர்களுக்கு, வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் வரி கேட்பு ஆணை பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அபராதத்துடன் வரி செலுத்த, வரும், 30 கடைசி நாள். அதனால் வரி செலுத்தி அனுமதி சீட்டின் மீதான ரத்து நடவடிக்கையை தவிர்க்கலாம்.
போக்குவரத்து அல்லாத வாகனங்களான, பொக்லைன், கிரேன், நெல் அறுவடை இயந்திரம், கட்டுமான உபகரண வாகன உரிமையாளர்கள், அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை உடனே செலுத்த வேண்டும். இல்லை எனில் வாகன சிறைபிடித்தல், அனுமதிச்சீட்டு மற்றும் பதிவுச்சான்று ரத்து போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.