/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வெள்ளப்பிள்ளையார் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்
/
வெள்ளப்பிள்ளையார் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்
ADDED : நவ 17, 2025 04:39 AM
ஆத்துார்: ஆத்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வெள்ளப்பிள்ளையார் கோவிலில், 4 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்பு பணி மேற்-கொள்ளப்பட்டது. தொடர்ந்து கடந்த அக்., 27ல், கும்பாபிேஷக விழாவுக்கு, முகூர்த்தக்கால் நடப்பட்டது.
நேற்று காலை, 9:00 மணிக்கு, புண்ய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் குடங்களை, அறங்காவலர் குழு தலைவர் ஸ்டாலின் தலைமையில் விழா குழுவினர், சிவாச்சாரி-யர்கள் சுமந்து, கோபுர கலசங்களுக்கு சென்றனர். 9:40 மணிக்கு, மூலவர் பிள்ளையார் கோவில் விமான கோபுரம், 3 ராஜகோபுரம் உள்பட, 7 கோபுரங்களில் உள்ள, 116 கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் செய்து வைத்தனர். ஏராளமான பக்-தர்கள் வழிபட்டனர். அவர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, அறங்காவலர்கள், விழா குழுவினர், பக்-தர்கள் வழிபட்டனர்.

