/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வெங்கட்ரமண சுவாமி கோவில் நில அளவீடு பணி தொடக்கம்
/
வெங்கட்ரமண சுவாமி கோவில் நில அளவீடு பணி தொடக்கம்
ADDED : மார் 14, 2024 01:32 AM
காடையாம்பட்டி, சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா காருவள்ளி சின்னதிருப்பதி வெங்கட்ரமணர் கோவில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அக்கோவில் பயன்பாட்டில் உள்ள, 28.64 ஏக்கர் நிலத்தில் வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் என, 20க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கட்டடங்கள் உள்ளன. ஆக்கிரமிப்பாளர்கள் நீண்ட நாட்களாக உள்ளதால், பட்டா கேட்டு, 2017ல் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினர். ஆனால், 2023 ஜூலை, 27ல் வழங்கிய தீர்ப்பில் கோவில் நிலங்களை அளவீடு செய்து ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற, வருவாய்த்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் தொடக்கமாக நேற்று, காடையாம்பட்டி தாசில்தார் ஹசினாபானு தலைமையில் வருவாய்த்
துறையினர், கோவில் உள்ள பகுதியை மட்டும் அளவீடு செய்தனர்.
இதுகுறித்து வருவாய்த்துறையினர் கூறுகையில், 'புறம்போக்கில் உள்ள கோவில் மட்டும் முதல்கட்டமாக அளவீடு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.

