/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதம் வைரலாகும் இளம் பெண் வீடியோ
/
டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதம் வைரலாகும் இளம் பெண் வீடியோ
டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதம் வைரலாகும் இளம் பெண் வீடியோ
டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதம் வைரலாகும் இளம் பெண் வீடியோ
ADDED : ஜூலை 15, 2025 01:03 AM
ஆத்துார், ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டில், பஸ்சில் இடம் பிடிப்பதற்காக வைத்த பை மாயமானது குறித்து, டிரைவர், கண்டக்டரிடம், தந்தையுடன் வந்த இளம் பெண் வாக்குவாதம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, சேலம் செல்லும் பஸ்களில் இடம் பிடிப்பதற்காக பஸ்சின் இருக்கையில் கையில் வைத்திருக்கும் பை, தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட பொருட்களை வைத்து, பஸ் புறப்பட்டதும் பஸ்சின் இருக்கையில் அமர்ந்து செல்கின்றனர்.
அதன்படி, நேற்று ஆத்துாரில் இருந்து சேலம் சென்ற தனியார் பஸ்சில், தனது தந்தையுடன் வந்த இளம் பெண், கையில் வைத்திருந்த பையை இருக்கையில் போட்டுள்ளார். பஸ் புறப்பட்டதும், பஸ்சில் ஏறிய பெண் இருக்கையில் போடப்பட்ட பையை காணவில்லை.
தொடர்ந்து, பஸ் புறப்பட்டு சென்ற நிலையில், பஸ்சை வழிமறித்து நிறுத்திய பெண், டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்தார்.
அப்போது, வேறு ஒரு பஸ்சில் பை இருந்ததாக, அங்கிருந்த பயணிகள் கொண்டு வந்தனர். அந்த பெண், இந்த பஸ்சில் வைத்த பை வேறு பஸ்சுக்கு சென்றது எப்படி என்று மீண்டும் தகராறு செய்தார்.
அங்கிருந்த மற்ற பயணிகள், அந்த பெண்ணை சமாதானம் செய்து, பஸ்சில் அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.