/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் ரயில்வே கோட்டத்தில் விஜிலென்ஸ் விழிப்புணர்வு
/
சேலம் ரயில்வே கோட்டத்தில் விஜிலென்ஸ் விழிப்புணர்வு
சேலம் ரயில்வே கோட்டத்தில் விஜிலென்ஸ் விழிப்புணர்வு
சேலம் ரயில்வே கோட்டத்தில் விஜிலென்ஸ் விழிப்புணர்வு
ADDED : அக் 28, 2025 01:59 AM
சேலம், சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில், நேற்று, தொடங்கிய விஜிலென்ஸ் விழிப்புணர்வு வாரம் வரும் நவ.,2 வரை நடக்கிறது.
நடப்பாண்டு, 'விஜிலென்ஸ் நமக்கு பகிரப்பட்ட பொறுப்பு' என்ற கருப்பொருள் அடிப்படையில், உயர்ந்த மனிதரான சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளுடன் இணைந்து கொண்டாடப்படுகிறது.
ரயில்வே கோட்ட மேலாளர் ஸ்ரீபன்னாலால் தலைமை வகித்து, ஒருமைப்பாடு உறுதிமொழியை வாசிக்க, அதிகாரிகள், பணியாளர்கள் ஏற்று கொண்டனர்.
ஊழலை தடுத்து, அதற்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் கூட்டாக பங்கேற்று ஊக்கப்படுத்தவும், ஊழலின் இருப்பு, காரணங்கள் மற்றும் தீவிரம், அதனால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, பொது நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையின் அவசியத்தை வெளிப்படுத்த வலியுறுத்தப்பட்டது.