/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விஜய் அரசியலிலும் சாதிப்பார்: நடிகர் ஸ்ரீகாந்த் தகவல்
/
விஜய் அரசியலிலும் சாதிப்பார்: நடிகர் ஸ்ரீகாந்த் தகவல்
விஜய் அரசியலிலும் சாதிப்பார்: நடிகர் ஸ்ரீகாந்த் தகவல்
விஜய் அரசியலிலும் சாதிப்பார்: நடிகர் ஸ்ரீகாந்த் தகவல்
ADDED : நவ 29, 2024 07:32 AM
ஆத்துார்: ''சினிமாவை போன்று அரசியலிலும் நடிகர் விஜய் சாதிப்பார். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் ஒற்றுமை இல்லாதது வேதனையாக உள்ளது,'' என, ஆத்துாரில், நடிகர் ஸ்ரீகாந்த் கூறினார்.
தலைவாசல் அருகே, நாவலுாரை சேர்ந்த, சினிமா தயாரிப்பாளர் மீனாட்சியின் தோட்டத்தில் பெரிய நாயகி, சாய்பாபா, அம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவிலில் நேற்று, அன்னதானம் வழங்கும் விழாவில் பங்கேற்ற நடிகர் ஸ்ரீகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது: நடிகராக இருந்த விஜய், துணிச்சலுடன் அரசியல் கட்சி துவங்கியதை வரவேற்கிறேன். சினிமாவை போன்று அரசியலிலும் சாதிப்பார். தற்போது நடிகர் சங்கத்தில் ஒற்றுமை இல்லாததால் தான், கட்டடம் கூட கட்டப்படாமல் இருப்பது வேதனையளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.