ADDED : ஏப் 21, 2026 03:29 AM

சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள, 11 சட்டசபை தொகுதிகளிலும், 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதிப்படுத்த கையெழுத்து இயக்கம், மாரத்தான் ஒட்டம், வாகன பேரணி, செல்பி பாயின்ட், கண்கவர் வண்ண கோலமிட்டு பல்வேறு வகையில் விழிப்பு-ணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சேலம் காந்தி மைதானத்தில், விழிப்புணர்வு நடைபயணம் நேற்று, நடந்துது.
மாவட்ட தேர்தல் அலுவலர் அருண்தம்புராஜ் கொடியசைத்து நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி-யபடி தொடங்கிய நடைபயணம், சங்கர் நகர், பெரமனுார் சாலை, அண்ணாபூங்கா வழியாக வந்து காந்தி விளையாட்டு மைதானத்தை அடைந்தது.
இந்த நடைபயணத்தில் ஏராளமான பேர் கலந்து கொண்டனர். மாவட்ட தேர்தல் அலுவலர் கூறுகையில், ''மாவட்டத்தில் எந்த ஒரு வாக்காளரும் விடுபடாமல் தேர்தல் நாளான வரும் 23ல், 100 சதவீதம் ஓட்டு போட்டு தங்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்,'' என்றார்.
