தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அத்தியாவசிய பணியில் உள்ள வாக்காளர் நாளை முதல் தபால் ஓட்டு போடலாம்

அத்தியாவசிய பணியில் உள்ள வாக்காளர் நாளை முதல் தபால் ஓட்டு போடலாம்

அத்தியாவசிய பணியில் உள்ள வாக்காளர் நாளை முதல் தபால் ஓட்டு போடலாம்


ADDED : ஏப் 16, 2026 04:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2026 04:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: இந்திய தேர்தல் கமிஷன் அறிவிப்பின்படி தென்னக ரயில்வே, அகில இந்திய வானொலி, கடல் துறை, இந்திய விமான ஆணையம், ஒளிபரப்பு தகவல் அமைச்சகம், ஊடகவியலா-ளர்கள், சென்னை மெட்ரோ ரயில், அரசு போக்குவரத்து கழகம், பவர் டிஸ்ட்ரிபியூஷன் கார்ப்பரேஷன் லிட்., தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை, சிறை மற்றும் சீர்திருத்த சேவை, போக்குவரத்து போலீஸ் என, 12 துறைகளை சேர்ந்த, அத்தியாவசிய பணி வாக்-காளர்கள்(ஏ.வி.இ.எஸ்.,) தபால் ஓட்டு போட அனுமதி அளிக்-கப்பட்டுள்ளது.

ஓட்டுப்போடும் நாளில் ஊழியர்களுக்கு, அவரவர் துறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பட்சத்தில் தபால் ஓட்டு அனும-திக்கப்படும்.

பணி ஒதுக்கீடு பெற்ற ஊழியர் விபரம், துறை ரீதியாக, சம்பந்தப்-பட்ட தொகுதி தேர்தல் அலுவலர்களுக்கு முன்னதாகவே அனுப்-பப்பட்டு, அதன் கடிதம், சம்பந்தப்பட்ட ஊழியருக்கும், தனித்த-னியே வழங்கப்பட்டுள்ளது. கடிதத்தை கொண்டு வந்து, ஊழி-யர்கள் தபால் ஓட்டை பதிவு செய்யலாம். அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள, 11 தொகுதிகள் முறையே, தேர்தல் அலுவலரின் அலுவலகத்தில், நாளை முதல், வரும், 19 வரை, ஏதாவது ஒரு நாளில் காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை தபால் ஓட்டுப்போடலாம்.

தொகுதி வாரியாக அத்தியாவசிய பணி வாக்காளர் எண்ணிக்கை விபரம் வருமாறு:

கெங்கவல்லி(தனி) - 249 பேர்; ஆத்துார்(தனி) - 179; ஏற்-காடு(தனி) - 127; ஓமலுார் - 161; மேட்டூர் - 192; இடைப்பாடி - 508; சங்ககிரி - 142; சேலம் மேற்கு - 55; சேலம் வடக்கு - 42; சேலம் தெற்கு - 22; வீரபாண்டி - 68 பேர் என, 1,745 பேர் தபால் ஓட்டுப்போடலாம். வரும்போது வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு ஆவணங்களை கொண்டு வர வேண்டும் என, தேர்தல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us