தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/தனியார் வேலை வேண்டுமா? 12ல் அம்மாபேட்டை வாங்க...

தனியார் வேலை வேண்டுமா? 12ல் அம்மாபேட்டை வாங்க...

தனியார் வேலை வேண்டுமா? 12ல் அம்மாபேட்டை வாங்க...


ADDED : நவ 30, 2026 01:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2026 01:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், அம்மாபேட்டை, கணேஷ் கலை, அறிவியல் கல்லுாரியில், தனியார் வேலை வாய்ப்பு முகாம், வரும் டிச., 12 காலை, 9:00 முதல் மதியம், 3:00 மணி வரை நடக்க உள்ளது.

உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவை, காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்பட, 200க்கும் மேற்பட்ட வேலை அளிக்கும் நிறுவனங்கள், 5,000க்கும் மேற்பட்ட காலி இடங்களுக்கு ஆளெடுக்கின்றன.

8 முதல், பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்து வித கல்வித்தகுதி கொண்டவர்கள் பயன் பெறலாம்.வேலை அளிக்கும் நிறுவனங்கள், வேலை நாடுவோர், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். விபரங்களுக்கு, jobfairmccsalem@gmail.com என்ற மின்னஞ்சல், 0427 - 2401750 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வேலை தேடுவோர், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என, கலெக்டர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us