/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும்; ஜாக்டோ - ஜியோ உண்ணாவிரதம்
/
பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும்; ஜாக்டோ - ஜியோ உண்ணாவிரதம்
பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும்; ஜாக்டோ - ஜியோ உண்ணாவிரதம்
பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும்; ஜாக்டோ - ஜியோ உண்ணாவிரதம்
ADDED : மார் 24, 2025 06:59 AM
சேலம்: சேலம், கோட்டை மைதானத்தில், மாவட்ட ஜாக்டோ - ஜியோ சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடந்தது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க ஒருங்கிணைப்பாளர் திருவேரங்கன் தலைமை வகித்தார். அதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல் உள்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். தமிழ்நாடு அரசு ஆசிரியர் முன்னேற்ற சங்க ஒருங்கிணைப்பாளர் கோவிந்தன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் திருமுருகவேள் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில ஒருங்கிணைப்பாளர் ராபின்சன் கூறுகையில், ''தி.மு.க., தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த, பழைய ஓய்வூதிய திட்டத்தை, உடனே அமல்படுத்தல் உள்ளிட்ட, கோரிக்கைகளை, தமிழக அரசு நிறைவேற்றவில்லை. இரு முறை அழைத்து பேசி முன்னேற்றம் இல்லை. தற்போது உண்ணாவிரதம் நடத்துகிறோம். இனியும் அழைத்து பேசி தீர்வு காணாவிட்டால் வரும், 30ல் மாநில ஒருங்கிணைப்பாளர் கூட்டம் கூட்டி ஆலோசித்து, அடுத்தகட்ட போராட்டத்தை விரைவில் அறிவிப்போம்,'' என்றார்.