/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நெல் மகசூல் அதிகரிக்க வேண்டுமா? துத்தநாக சல்பேட் பயன்படுத்துங்க..
/
நெல் மகசூல் அதிகரிக்க வேண்டுமா? துத்தநாக சல்பேட் பயன்படுத்துங்க..
நெல் மகசூல் அதிகரிக்க வேண்டுமா? துத்தநாக சல்பேட் பயன்படுத்துங்க..
நெல் மகசூல் அதிகரிக்க வேண்டுமா? துத்தநாக சல்பேட் பயன்படுத்துங்க..
ADDED : நவ 30, 2024 02:48 AM
.சேலம்: நெல் சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற, துத்தநாக சல்பேட் எனும் நுண்ணுாட்ட உரத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்-ளது.
இதுகுறித்து சேலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சண்மு-கப்பிரியா அறிக்கை:மழைக்காலங்களில் மேட்டுப்பகுதிகளை விட, நீர் தேங்கியுள்ள பகுதிகளில், மண்ணில் துத்தநாக சத்து பற்றாக்குறை ஏற்படு-வதால், நெற்பயிரில் மகசூல் குறைய வாய்ப்புள்ளது. துத்தநாக சத்து நெற்பயிரில் மாவுச்சத்து உருமாற்றத்துக்கும், பயிர் வளர்ச்-சிக்கும் தேவையான, 'இன்டோல் அசிட்டிக்' அமிலம் உற்பத்தி செய்ய உதவுகிறது. இது கிரியா ஊக்கியாகவும், மற்ற நுண்-ணுாட்ட சத்துகளை பயிர் சரியான முறையில் பயன்படுத்திடவும், பயிர்கள் நீரை சீராக எடுத்துக்கொள்ளவும் உதவுகிறது. இதனால், நெற்பயிரில் பதர் நெல் குறைந்து, மகசூல் அதிகரிக்கிறது.
பற்றாக்குறை அறிகுறி
இலைகளின் மேற்பரப்பில் பழுப்பு நிற புள்ளிகள் காணப்பட்டு, வளர்ச்சி தடைபட்டு நெற்பயிர் சீராக இல்லாமல் காணப்படும். இலைகளின் அளவு சிறுத்தும், நுனிப்பகுதி பச்சையாகவும், நடுப்-பகுதி வெளிர் மஞ்சள் நிறமாகவும் காணப்படும். இலைகளை மடித்தால், ஒடியக்கூடியதாக இருக்கும். துார் உற்பத்தி குறைவாக காணப்படும். நெற்பயிரில் துத்தநாகச்சத்து பற்றாக்குறையே, 'கெய்ரா' நோய் எனப்படும்.
துத்தநாக சத்து மேலாண்மை
பயிர் நடவு செய்யும்போது, துத்தநாக சல்பேட் ஏக்கருக்கு, 10 கிலோ எடுத்து, 20 கிலோ மணலுடன் கலந்து, சீராக மேற்ப-ரப்பில் இடவேண்டும். மேலும் துத்தநாக சத்து பற்றாக்குறை காணப்படும் இடங்களில், அரை கிலோ ஜிங்க் சல்பேட் நுண்-ணுாட்ட உரத்தை, 100 லிட்டர் நீரில் கரைத்து தெளித்து நிவர்த்தி செய்யலாம்.
மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில், சம்பா நெல் சாகுபடியில் உற்பத்தியை அதிகரிக்க, விவசாயிகளுக்கு, ஒரு ஏக்கருக்கு, 10 கிலோ துத்தநாக சல்பேட் மானியத்தில் வழங்கப்படுகிறது. சேலம் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் தேவையான அளவு இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. விவசாயிகள் சம்பா நெல் சாகுபடியில் துத்தநாக சல்பேட் பயன்ப-டுத்தி உற்பத்தியை அதிகரித்து பயன்பெறலாம்.