தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட்

இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட்

இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட்


ADDED : செப் 25, 2024 07:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2024 07:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் மாவட்டம் தலைவாசலை சேர்ந்த குணசேகரன் மனைவி கங்காதேவி, 41. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆதிமூலம், அவரது மகன்களுக்கும் நிலத்தகராறு ஏற்பட்டது. இதில், 2020ல் தாக்குதல் நடத்தியதில் கங்காதேவி படுகாயம் அடைந்தார். இந்த வழக்கில் தலைவாசல் போலீசார் வழக்கு பதிந்து, ஆதிமூலம் உள்பட, 3 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு சேலம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. அதில் விசாரணை அதிகாரியாக இருந்த, இன்ஸ்பெக்டர் குமரவேல்பாண்டியனுக்கு பலமுறை 'சம்மன்' அனுப்பியும் சாட்சிக்கு ஆஜராகவில்லை. நேற்றும் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அவர் ஆஜராகவில்லை. இதனால் பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி நம்பிராஜன் உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us