/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நீர்வரத்து 19,495 கனஅடியாக உயர்வு; மேட்டூர் நீர்மட்டம் 3.5 அடி அதிகரிப்பு

ADDED : அக் 18, 2024 07:23 AM
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரித்து, நீர்திறப்பு குறைந்ததால் நேற்று நீர்மட்டம், 93.35 அடியாக உயர்ந்தது.
மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த ஜூலை, 30 அணை நிரம்பிய நிலையில் கர்நாடகா அணைகள் உபரி நீர்திறப்பு குறைந்ததால் மேட்டூர் அணை நீர்மட்டம் சரியதுவங்கியது.
கடந்த, 13ல், 89.26 அடியாக இருந்த நீர்மட்டம், 14ல், 89.92 அடியாக உயர்ந்தது. டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததால் கடந்த, 14ல் மேட்டூர் அணை நீர்திறப்பு, 500 கனஅடியாக குறைக்கப்பட்டது. நேற்று முன்தினம் வினாடிக்கு, 16,196 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து நேற்று, 19,475 கனஅடியாக உயர்ந்தது. நீர்வரத்தை விட திறப்பு குறைந்ததால் அணை நீர்மட்டம், 93.35 அடி, நீர் இருப்பு, 56.56 டி.எம்.சி.,யாக உயர்ந்தது. கடந்த, 5 நாட்களில் அணை நீர்மட்டம், 3.5 அடி, நீர் இருப்பு, 4 டி.எம்.சி., அதிகரித்துள்ளது.