தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/நீர்வரத்து 2,878 கன அடியாக உயர்வு

நீர்வரத்து 2,878 கன அடியாக உயர்வு

நீர்வரத்து 2,878 கன அடியாக உயர்வு


ADDED : நவ 28, 2026 06:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2026 06:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர்:மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த, 18ல் வினாடிக்கு, 1,119 கன அடியாக இருந்த அணை நீர்வரத்து, 19ல், 1,026 கனஅடி, 22ல், 772 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு, 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. திறப்பை விட வரத்து குறைந்ததால், கடந்த, 18ல், 61.54 அடியாக இருந்த அணை நீர்மட்டம், 19ல், 61.53 அடி, நேற்று முன்தினம், 61.25 அடியாக சரிந்தது.

இந்நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் வடகிழக்கு பருவமழையால் நேற்று முன்தினம், வினாடிக்கு, 679 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து, நேற்று, 2,878 கனஅடியாக அதிகரித்தது. இதனால் திறப்பை விட வரத்து கூடுதலாக இருந்ததால், நேற்று முன்தினம், 61.25 அடியாக இருந்த அணை நீர்மட்டம், நேற்று காலை, 61.45 அடியாக அதிகரித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us