/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இன்று கரியகோவில் அணையில் நீர் திறப்பு
/
இன்று கரியகோவில் அணையில் நீர் திறப்பு
ADDED : மார் 06, 2026 04:13 AM
பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த பாப்பநாயக்கன்பட்டியில், 52.59 அடி உயரத்தில், 190 மில்லியன் கன அடி நீர் தேங்கும்படி கரியகோவில் அணை உள்ளது.
அதில், பழைய மற்றும் புதிய பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி பழைய பாசன பகுதிகளுக்கு இன்று காலை, 8:00 மணி முதல், அணையின் பிரதான கால்வாய் மதகுகளின் ஆற்று வெளிப்போக்கி வழியே வினாடிக்கு, 40 கன அடி வீதம் திறக்கப்படுகிறது. 15 நாட்களுக்கு, 53,292 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படும்.அதேபோல் புது பாசன பகுதிக்கு வரும், 21ல் கால்வாய்கள் மூலம் வினாடிக்கு, 30 கன அடி வீதம் தண்ணீர் திறககப்படும். 14 நாட்களுக்கு, 35,528 மில்லியன் கன அடிக்கு மிகாமல் சிறப்பு நினைப்பாக தண்ணீர் திறக்க அனுமதி வழங்கி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

