sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கட்டணம் செலுத்தாததால் குடிநீர் 'கட்'; ஒன்றிய ஆபீசை முற்றுகையிட்ட மக்கள்

/

கட்டணம் செலுத்தாததால் குடிநீர் 'கட்'; ஒன்றிய ஆபீசை முற்றுகையிட்ட மக்கள்

கட்டணம் செலுத்தாததால் குடிநீர் 'கட்'; ஒன்றிய ஆபீசை முற்றுகையிட்ட மக்கள்

கட்டணம் செலுத்தாததால் குடிநீர் 'கட்'; ஒன்றிய ஆபீசை முற்றுகையிட்ட மக்கள்


ADDED : டிச 05, 2025 10:32 AM

Google News

ADDED : டிச 05, 2025 10:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி: குடிநீர் இணைப்பு கட்டணம், மாத சேவை கட்-டணம் செலுத்தாதால், அத்தனுார்பட்டி புதுார் மக்களுக்கு குடிநீர் வினியோகத்தை, அதிகா-ரிகள் நிறுத்தினர். இதை கண்டித்து, பாதிக்கப்-பட்ட மக்கள், ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை-யிட்டனர்.வாழப்பாடி ஒன்றிய அலுவலகத்தை, நேற்று காலை, 10:00 மணிக்கு, அத்தனுார்பட்டி புதுார் மக்கள் முற்றுகையிட்டு, குடிநீர் வழங்க வலியு-றுத்தினர்.

இதுகுறித்து மக்கள் கூறியதாவது: எங்கள் பகுதியில், 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் இல்லை. ஊராட்சி செயலரிடம் கேட்டபோது, ஓராண்டுக்கு முன் குழாய் அமைத்-ததற்கான இணைப்பு கட்டணம், மாத சேவை கட்டணம் செலுத்தினால் தான், குடிநீர் வழங்கப்-படும் என்கிறார். திடீரென வினியோகத்தை நிறுத்தியதை கண்டித்து முற்றுகையிட்-டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின் வாழப்பாடி போலீசார் பேச்சு நடத்தி, நட-வடிக்கை எடுப்பதாக கூறியதால், 11:30 மணிக்கு மக்கள் கலைந்து சென்றனர்.இதுகுறித்து வாழப்பாடி பி.டி.ஓ., ஜெயா கூறிய-தாவது: ஓராண்டுக்கு முன், 'ஜல் ஜீவன் மிஷின்' திட்-டத்தில், அப்பகுதியில், 153 குடிநீர் குழாய்கள் ஒவ்-வொரு வீடுகளுக்கும் தனித்தனியாக அமைக்-கப்பட்டன. அதில் குடிநீர் வினியோகிக்கப்பட்-டது. குடிநீர் இணைப்பு கட்டணம், 2,000, மாத சேவை கட்டணம், ஆண்டுக்கு, 360 ரூபாய் செலுத்த வேண்டும். அப்பகுதியில், 9 இணைப்-புக்கு மட்டும் கட்டணம் செலுத்தப்பட்டது.

இதுகுறித்து ஒரு மாதத்துக்கு முன், கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது. யாரும் செலுத்தா-ததால் வினியோகம் நிறுத்தப்பட்டது. தற்போதும் கட்டணம் செலுத்த அறிவுறுத்தி, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us