/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அங்கன்வாடி மையம் அருகேதுாண்கள் சேதமான நீர் தொட்டி
/
அங்கன்வாடி மையம் அருகேதுாண்கள் சேதமான நீர் தொட்டி
ADDED : மே 04, 2025 01:32 AM
எலச்சிபாளையம்:எலச்சிபாளையம், சந்தைப்பேட்டை பகுதியில் அங்கன்வாடி மையம் அருகே, 20 ஆண்டுகளுக்கு முன், 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.
சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்கள், குடிநீர் பிடித்து பயன்படுத்தி வந்தனர். தற்போது, மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் துாண்கள் உதிர்ந்து, கம்பிகள் ஆங்காங்கே துருப்பிடித்து வெளியே தெரிகின்றன.
இதனால், தண்ணீர் தொட்டி எந்த நேரம் வேண்டுமானாலும் இடிந்து கீழே விழ வாய்ப்புள்ளது. அவ்வாறு விழுந்தால் பெரும் உயிரிழப்பு கூட நேரிடலாம். இதன் அருகே அங்கன்வாடி மையம் மற்றும் குடியிருப்புகள் இருப்பதால், பெற்றோர், பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
குழந்தைகள், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, சிதிலமடைந்த தண்ணீர் தொட்டியை இடித்து அகற்றிவிட்டு, புதிய தொட்டி கட்ட, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.