/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நீர் வழிப்பாதை உடைப்பு: மக்களே சேர்ந்து சீர-மைப்பு
/
நீர் வழிப்பாதை உடைப்பு: மக்களே சேர்ந்து சீர-மைப்பு
நீர் வழிப்பாதை உடைப்பு: மக்களே சேர்ந்து சீர-மைப்பு
நீர் வழிப்பாதை உடைப்பு: மக்களே சேர்ந்து சீர-மைப்பு
ADDED : ஆக 19, 2024 06:06 AM
ஓமலுார்: மேட்டூர் உபரி நீரேற்றும் திட்டத்தில் பல ஏரிக-ளுக்கு தண்ணீர் சென்று நிரம்பியுள்ளன. அதன்படி இரு நாட்களுக்கு முன், ஓமலுார் அருகே பெரி-யேரிப்பட்டி ஏரி நிரம்பி அதன் உபரி நீர், குப்பனுார் வழியே தாரமங்கலம் ஏரிக்கும், மற்றொரு வழி-யாக அம்மன்கோவில், தாண்டானுார் வழியே பெரியகாடம்பட்டி ஏரிக்கும் செல்லத் தொடங்கி-யது. இதனால் அப்பகுதி மக்கள் ஆர்வமுடன், ஏரிக்கு நீர் வர உள்ளதை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில் பெரியகாடம்பட்டி ஏரியில் மண் அள்ளும் பணி நடந்ததால் மர்ம நபர்கள் ஏரிக்கு நீர் வருவதை தடுக்கும்படி, பெரியேரிப்பட்டி அங்-காளம்மன் கோவில் அருகே நீர் வழிப்பாதையில் உடைப்பை ஏற்படுத்தி தண்ணீர் ஏரிக்கு வரு-வதை தடுத்து வேறுவழியில் திருப்பி விட்டதாக தகவல் பரவியது. இதுகுறித்து பொதுப்பணி, வருவாய்த்துறையின-ருக்கு பெரியகாடம்பட்டி மக்கள் தகவல் கொடுத்-தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.இதனால் பெரியகாடம்பட்டி மக்கள் சேர்ந்து உடைப்பு ஏற்பட்ட பகுதிக்கு நேற்று காலை சென்-றனர். தொடர்ந்து கால்வாய் உடைப்பை அவர்க-ளாகவே சீரமைத்தனர்.இதையடுத்து காய்வாய் நீர் முழுதும் பெரியகா-டம்பட்டி ஏரிக்கு செல்லத்தொடங்கியது. மேலும் ஏரியில் மண் அள்ளும் பணி நிறுத்தப்பட்டது.

