/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆறுமுகத்தை விடவா அதிக ரவுடிகளை வைத்துள்ளோம்: அண்ணாமலை
/
ஆறுமுகத்தை விடவா அதிக ரவுடிகளை வைத்துள்ளோம்: அண்ணாமலை
ஆறுமுகத்தை விடவா அதிக ரவுடிகளை வைத்துள்ளோம்: அண்ணாமலை
ஆறுமுகத்தை விடவா அதிக ரவுடிகளை வைத்துள்ளோம்: அண்ணாமலை
ADDED : ஏப் 05, 2024 04:36 AM
சேலம்: ''ஆறுமுகத்தை விடவா அதிக ரவுடிகளை வைத்துள்ளோம்,'' என்று, முதல்வர் ஸ்டாலின் பேச்சுக்கு, பா.ஜ., தலைவர் அண்ணாமலை பதிலடி தெரிவித்தார்.
சேலம், அம்மாபேட்டையில், பா.ம.க., வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
கடந்த, 2014ல், காங்., உட்கட்டமைப்புக்கு, 1.17 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியது. 2024 பிப்ரவரி பட்ஜெட்டில், 11 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த, 33 மாதங்களில், தி.மு.க., உட்கட்டமைப்புக்கு என்ன செய்துள்ளது?
சேலத்தில் குண்டும் குழியும் இல்லாத சாலையை காட்டினால் அரசியலை விட்டே விலக தயார். பா.ஜ.,வில் ரவுடிகள் உள்ளதாக, சேலத்துக்கு வந்த ஸ்டாலின்
பேசியுள்ளார். முன்னாள் அமைச்சரான, வீரபாண்டியை சேர்ந்த ஆறுமுகத்தை விடவா அதிகம் வைத்துள்ளோம். கள்ளச்சாராய வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட காந்தி, இன்று தமிழக அமைச்சர். அராஜகம், அடாவடி என்றாலே அது, தி.மு.க., தான். ஸ்டாலின், அவரது சட்டைக்கு பின்னே இருப்பதை பார்க்க மாட்டேங்கிறார். சுடுகாட்டு கூரை வழக்கில் சிக்கியவர், தற்போது சேலம் தி.மு.க., வேட்பாளர்.
பட்ஜெட்டுக்கு நேரடியாக தருவது மட்டும்தான் மத்திய அரசின் நிதியாம். பல்வேறு திட்டங்களுக்கு நேரடியாக வழங்கப்படுவது கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்களாம். நீங்கள் கொள்ளையடிக்க, நிதி ஒதுக்க, நாங்கள் ஒன்றும் முட்டாள் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

