ADDED : மார் 06, 2026 04:11 AM
சேலம்: சேலம் மாவட்டத்தில் ஈர நிலங்கள் பாதுகாப்பு, புதிதாக ஈர நிலங்களை கண்டறிந்து அறிவித்தல் குறித்து, கருத்தரங்கு கூட்டம் நடந்தது.
கலெக்டர் பிருந்தா தேவி தலைமை வகித்து பேசியதாவது:ஈர நிலம் என்பது எப்போதும் நீர் நிரம்பிய அல்லது ஈரப்பதத்துடன் இருக்கும் பகுதி. அப்பகுதிகளில் இயற்கை சுற்றுச்சூழலுக்கு ஏற்றவை, குறிப்பாக ஏரிகள், சதுப்பு நிலங்கள், குளங்கள், மாங்குரோவ் காடுகள் ஆகியவை ஈர நிலங்களாக அடையாளம் காணப்படுகின்றன.
இவற்றில் தனித்துவ தாவரங்கள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள், விலங்குகள் வாழும். ஈர நிலங்களால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கிறது. அதனால் ஈர நிலங்களை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும். மக்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ஈர நிலங்களில் குப்பை கழிவு கொட்டுவது கூடாது. அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதுகாப்பு செய்வதோடு, புதிதாக ஈர நிலங்கள் குறித்து கண்டுபிடித்து, அப்பகுதியை அறிவிப்பு செய்து பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட வன அலுவலர் யஷ்வந்த் அம்புல்கர், டி.ஆர்.ஓ., ரவிக்குமார், தன்னார்வ அமைப்புகள், மாணவர்கள் பங்கேற்றனர்.
