/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முகவரி கொடுத்த இயக்கத்துக்கு உழைக்க வேண்டும்: எம்.பி.,
/
முகவரி கொடுத்த இயக்கத்துக்கு உழைக்க வேண்டும்: எம்.பி.,
முகவரி கொடுத்த இயக்கத்துக்கு உழைக்க வேண்டும்: எம்.பி.,
முகவரி கொடுத்த இயக்கத்துக்கு உழைக்க வேண்டும்: எம்.பி.,
ADDED : நவ 19, 2024 05:12 AM
தாரமங்கலம்: சங்ககிரி தொகுதிக்குட்பட்ட, தாரமங்கலம் நகர, தி.மு.க., பூத் கமிட்டி உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. சேலம் எம்.பி., செல்வகணபதி தலைமை வகித்து பேசியதாவது: கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., சங்ககிரி தொகுதியில் தோல்வியடைந்தது. அதற்கு அடுத்த நடந்த உள்ளாட்சி தேர்-தலில், தி.மு.க., வெற்றி பெற்று நகரமன்ற தலைவர் குணசேகரன் உள்ளார்.
கடந்த எம்.பி., தேர்தலில் நகரத்தில் தி.மு.க., 425 ஓட்டுகள் குறைவாக பெற்றது. நகரமன்ற தலைவர், கவுன்சிலர்களான உங்களுக்கு முக-வரி கொடுத்த, தி.மு.க., இயக்கத்திற்கு உழைக்க வேண்டும். நகர, வார்டு செயலாளர்கள், சிறப்பாக பணி செய்பவர்களை பூத்க-மிட்டி, உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும். வேறுபாடு இன்றி அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு பேசினார்.சங்ககிரி தொகுதி பொறுப்பாளர் செந்தில்குமார், மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து, நகர செயலாளர் குணசேகரன், துணைசெயலாளர் தங்கமணி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.