தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'சட்டசபையில் தி.மு.க.,வே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்'

'சட்டசபையில் தி.மு.க.,வே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்'

'சட்டசபையில் தி.மு.க.,வே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்'


ADDED : ஜன 24, 2026 06:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2026 06:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆத்துார்: ஆத்துாரில், இன்று (24ல்) நடைபெறும், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் தொடர்பாக நேற்று முன்தினம் ஆத்துார், கெங்க-வல்லி, ஏற்காடு சட்டசபை தொகுதிகளுக்கான, அ.தி.மு.க., ஒன்றிய, நகர, பேரூர் செயலர்கள் ஆலோசனை கூட்டம், சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமையில் நடந்தது.

இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: அ.தி.மு.க., முதல்கட்ட தேர்தல் அறிக்கையை பார்த்து, தி.மு.க.,வுக்கு பயம் வந்துவிட்டது. பட்டியல் இன மக்களுக்கு வீடு கட்டுவது தொடர்பாக, அப்பகுதி மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். தேர்தல் அறிக்கையை, மக்களிடம் துண்டு பிரசுரமாக வழங்க வேண்டும். தி.மு.க., ஆட்சி, அடுத்த மாதம் வரை மட்டுமே இருக்கும். அ.தி.மு.க., ஆட்சி வந்த-வுடன், மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும். திண்ணை பிரசாரமாக, தேர்தல் அறிக்கை குறித்து வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்ய வேண்டும். அ.தி.மு.க., வலிமையான கூட்டணி அமைத்துவிட்டது. தி.மு.க.,வை அகற்ற மக்கள் முடிவு செய்துவிட்டனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள, 11 தொகுதிகளிலும், அ.தி.மு.க.,வை, 50 ஆயிரம் ஓட்டு வித்தியா-சத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். 2026 தேர்தலுக்கு பின், சட்டசபையில் தி.மு.க.,வே இல்லாத நிலை உருவாகும். இ.பி.எஸ்., முதல்-வராக வந்த பின், தமிழகத்திற்கு அனைத்து திட்-டங்களையும், மத்திய அரசிடம் பெற்று தருவார்.

இவ்வாறு பேசினார். மாவட்ட, நகர, ஒன்றிய செயலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us