/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'தி.மு.க.,அரசின் சாதனைகளை கூறி ஓட்டு கேட்க வேண்டும்'
/
'தி.மு.க.,அரசின் சாதனைகளை கூறி ஓட்டு கேட்க வேண்டும்'
'தி.மு.க.,அரசின் சாதனைகளை கூறி ஓட்டு கேட்க வேண்டும்'
'தி.மு.க.,அரசின் சாதனைகளை கூறி ஓட்டு கேட்க வேண்டும்'
ADDED : ஜூன் 30, 2025 03:32 AM
ஆத்துார்: ''தி.மு.க., அரசின் சாதனைகளை கூறி, ஓட்டு கேட்க வேண்டும்,'' என, தி.மு.க., பொது உறுப்பினர் கூட்டத்தில், மாவட்ட செயலர் சிவலிங்கம் பேசினார்.
ஆத்துார் தெற்கு நகர தி.மு.க., சார்பில், நேற்று ஆத்துார் நக-ராட்சி அண்ணா கலையரங்கில் பொது உறுப்பினர் கூட்டம், மாவட்ட செயலர் சிவலிங்கம் தலைமையில் நடந்தது.
அப்போது, அவர் பேசியதாவது:
தி.மு.க., ஆட்சியின் நான்கு ஆண்டு சாதனைகளை, மக்களிடம் எடுத்துரைத்து ஓட்டு கேட்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்-திலும், ஏதாவது திட்டங்கள் சென்றிருக்கும். 200 தொகுதிகளில் தி.மு.க., வெற்றி பெறுவதற்காக, முதல்வர் ஸ்டாலின் பல்வேறு தேர்தல் பணிகளை மேற்கொள்கிறார். லோக்சபா தேர்தலை போன்று, தி.மு.க., கூட்டணி அனைத்து சட்டசபை தொகுதிக-ளிலும் வெற்றி பெறும்.
தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள், கட்சியினர் உறுப்பினர் சேர்க்-கையை தீவிரப்படுத்த வேண்டும். பழைய உறுப்பினர்களை புதுப்-பித்து, புதிய உறுப்பினர் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். கட்சியினர் ஒற்றுமையாக இருந்து தேர்தல் பணிகளை மேற்கொண்டால் வெற்றி உறுதியாகும். ஆத்துார் சட்டசபை தொகுதியில், தி.மு.க., வெற்றி பெற களப்பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
மாவட்ட பொருளாளர் ஸ்ரீராம், நகர செயலர்கள் வடக்கு பால-சுப்ரமணியம், தெற்கு ராமச்சந்திரன், நகராட்சி தலைவி நிர்மலா-பபிதா, கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.