ADDED : மார் 30, 2026 06:10 AM
தமிழ்நாடு
வணிகர் சங்க பேரமைப்பு, சேலம் மாவட்ட கூட்டம், அதன் சங்க கட்டடத்தில்
நேற்று நடந்தது. அதில் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கூறியதாவது:
பேரமைப்பின்,
43வது மாநில மாநாடு, மே, 5ல் திருவாரூரில் நடக்க உள்ளது. சேலம் மாவட்டம்
சார்பில், 10,000 பேர் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சாமானிய
வணிகர்களுக்காக சிறப்பு பாதுகாப்பு சட்டம் இயற்ற, மத்திய - மாநில
அரசுகளுக்கு வலியுறுத்தப்படும்.
கட்டடம், குப்பை உள்ளிட்ட வரிகளை
மறுபரிசீலனை செய்வது போன்ற வணிகர்களின் கோரிக்கையை ஏற்று, எழுத்துப்பூர்வ
உத்தரவாதம் தரும் கட்சிக்கு, தேர்தலில் ஆதரவு தர முடிவு எடுத்துள்ளோம்.
போராட்ட அறிவிப்பால், இரு நாட்களாக தேர்தல் பறக்கும்படை கெடுபிடி
குறைந்துள்ளது. 2 லட்சம் ரூபாய் வரை எடுத்துச்செல்ல அனுமதி கேட்டுள்ளோம்.
தேர்தலில், 'எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல' என்ற கோஷத்துடன், 100 சதவீதம்
ஓட்டுப்போட வணிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வணிக சிலிண்டர்
தட்டுப்பாடு இனியும் தொடரக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
