/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., ஆட்சிக்கு ஜெயலலிதா நினைவு நாளில் சபதம் ஏற்போம்'

ADDED : டிச 06, 2024 07:19 AM
ஆத்துார்: -முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 8ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, ஆத்துார், கோட்டையில் உள்ள அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு, அ.தி.மு.க.,வின், சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:அ.தி.மு.க., ஆட்சி திட்டங்கள் தான், மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளன. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 1.50 கோடி தொண்டர்களை உருவாக்கினார். முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., 2.14 கோடி உறுப்பினர்களாக கொண்டு வந்து கட்சியை மேலும் வலிமைப்படுத்தியுள்ளார். வரும், 2026 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வை வெற்றி பெற வைத்து, இ.பி.எஸ்.,சை, மீண்டும் முதல்வராக கொண்டு வர வேண்டும். தி.மு.க.,வை காணாமல் போக செய்வதற்கு, ஜெயலலிதா நினைவு நாளில் சபதம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மவுன அஞ்சலி செலுத்திய பின், 2,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் எம்.எல்.ஏ.,க்களான, ஆத்துார் ஜெயசங்கரன், கெங்கவல்லி நல்லதம்பி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாதேஸ்வரன், சின்னதம்பி, ஆத்துார் நகர செயலர் மோகன், தலைவாசல் ஒன்றிய குழு தலைவர் ராமசாமி, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.