தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 200 துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

200 துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

200 துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி


ADDED : ஜூலை 24, 2026 02:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 24, 2026 02:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துார்: ஆத்துார் நகராட்சி அண்ணா கலையரங்கில், நேற்று நகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு கண் சிகிச்சை பரிசோ-தனை, ஆதார், ஜாதி சான்று உள்ளிட்ட ஆவணங்கள் பதிவு செய்யும் முகாம் நடந்தது.

இதில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன்பார்த்-திபன் பங்கேற்று, 200 துாய்மை பணியாளர்களுக்கு உபகர-ணங்கள், மருத்துவ காப்பீடு அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உத-விகளை வழங்கினார்.இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''சேலம் மாவட்டத்தில், தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் தொடர்-பான வந்த புகார்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க உத்த-ரவிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் கொள்ளை, கொலை சம்பவங்கள் நடந்து வருவது குறித்து தனிப்படை அமைத்து, உட-னடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஸ்டேஷன்களில், போலீஸ் பற்றாக்குறை சரி செய்யப்படும்,'' என்றார்.

அரசு விழாவில் த.வெ.க., நிர்வாகிகள்

விழா தொடங்கும் முன், த.வெ.க.,வினரை மேலே வர வேண்டாம் என அமைச்சர் கூறி சென்றார். ஆனால் விழா தொடங்கிய சில நிமிடங்களில், சேலம் கிழக்கு மாவட்ட செய-லாளர் வெங்கடேசன், ஆத்துார் நகர செயலர் நாகராஜ் ஆகியோர் விழா மேடையில் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை அமைச்ச-ருடன் சேர்ந்து வழங்கிய வீடியோ வைரலாகி சர்ச்சை எழுந்துள்-ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us