/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
துாய்மை பணியாளர்களுக்கு தாட்கோ மூலம் நலத்திட்ட உதவி
/
துாய்மை பணியாளர்களுக்கு தாட்கோ மூலம் நலத்திட்ட உதவி
துாய்மை பணியாளர்களுக்கு தாட்கோ மூலம் நலத்திட்ட உதவி
துாய்மை பணியாளர்களுக்கு தாட்கோ மூலம் நலத்திட்ட உதவி
ADDED : டிச 23, 2025 08:12 AM
சேலம்: சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கழிவறை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள், தாட்கோவில் பதிவு செய்து, நலத்-திட்ட உதவிகளை பெறலாம். சேலம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில், கழிவறை சுத்தம் செய்தல், சாக்கடை துார்வாருதல், கழிவு நீர் அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு, தாட்கோ மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சேலம் மாநக-ராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லுாரி, வணிக நிறுவனங்கள், சினிமா தியேட்டர் மற்றும் மருத்துவமனைகளில் துாய்மை பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்கள் அனை-வரும், தாட்கோவில் பதிவு செய்து, அவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை பெறலாம். ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களுடன் இணையதளம் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம். மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர்களை தொடர்பு கொண்டு பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

