/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.15 கோடியில் 733 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
/
ரூ.15 கோடியில் 733 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
ரூ.15 கோடியில் 733 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
ரூ.15 கோடியில் 733 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : நவ 02, 2025 12:57 AM
சேலம், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சேலம் அடுத்த நெய்க்காரப்பட்டி
யில் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். ராஜ்ய
சபா எம்.பி., சிவலிங்கம் முன்னிலை வகித்தார்.
அமைச்சர் ராஜேந்திரன் பேசுகையில், ''உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் வழங்கிய மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு, 676 பேருக்கு வீட்டுமனைப்பட்டா, 27 பேருக்கு பட்டா மாறுதல் ஆணையம், 30 பேருக்கு தையல் இயந்திரம் என, 733 பயனாளி
களுக்கு, 15.65 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. சேலம், ஜாகீர் அம்மாபாளையத்தில், நெசவாளர்கள் நலன் காக்க, 880 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா தொடங்கப்பட்டுள்ளது,'' என்றார்.
டி.ஆர்.ஓ., ரவிக்குமார்,
ஆர்.டி.ஒ., உதயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

