ADDED : நவ 19, 2026 01:34 AM
அ நிறம் | அளவு
கெங்கவல்லி: தம்மம்பட்டி டவுன் பஞ்சாயத்து, வ.உ.சி., நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, 3 பொது கிணறுகளை ஆழப்படுத்தி மேம்படுத்த வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அந்த கிணறுகளை சிலர் நள்ளிரவில் இடித்து மூடியுள்ளனர். மூடப்பட்ட கிணறுகளை மீட்கவும், கிணறுகளை மூடிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி, நேற்று டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் மோகனரங்கனிடம், மக்கள் புகார் மனு அளித்தனர்.
