ADDED : ஜூலை 15, 2024 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் மாவட்டம் ஓமலுார், முத்துநாயக்கன்பட்டி, பாலக்கொட்-டப்பட்டி காலனியை சேர்ந்தவர் செந்தில்முருகன், 39.
கூலித்தொ-ழிலாளியான இவர், கருப்பூர், குடுவம்பட்டி மஞ்சையன்காட்டில் புவனேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான கிணற்றை ஆழப்ப-டுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் மாலை, 15 அடி ஆழத்தில் இருந்து செந்தில் முருகன் மேலே ஏறி வந்தார். அப்போது கிணற்றின் மேற்பகு-தியில் இருந்த மண் சரிந்து விழுந்தது. இதில் மண்ணுக்கு அடியில் சிக்கிக்கொண்டார். சக தொழிலாளர்கள் இறங்கி, அவரை மீட்க முயன்றனர். அதற்குள் மூச்சு திணறி செந்தில்முருகன் உயி-ரிழந்தார். கருப்பூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரிக்கின்-றனர்.

