தண்டவாளத்தில் இறந்து கிடந்தவர் மேற்கு வங்க தொழிலாளி
தண்டவாளத்தில் இறந்து கிடந்தவர் மேற்கு வங்க தொழிலாளி
ADDED : ஜூன் 26, 2026 02:41 AM
சேலம்; சேலம் ரயில்வே கோட்டம் மொரப்பூர் - தொட்-டம்பட்டி ரயில்வே ஸ்டேஷன்கள் இடையே, கடந்த, 19ல், ஒருவர் இறந்து கிடந்தார். உடல் சிதைந்து, கை, கால்களில் பலத்த காயம் இருந்-ததால், ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்தி-ருக்கலாம் என்ற கோணத்தில், சேலம் ரயில்வே போலீசார் விசாரித்தனர்.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம், பூர்வ-மித்னாபூரை சேர்ந்த, தொழிலாளி கவுதம் சமந்தா, 45, என்பவர், சேலம் வரும்போது மாயமானதாக புகார் கொடுக்கப்பட்டிருந்தது. அவரது அடையா-ளங்களும், இறந்தவரின் அடையாளங்களுடன் ஒத்துப்போனது. புகார் அளித்த ரஞ்சித்மித்யா என்பவரை வரவழைத்து, இறந்தவர் உடலை காட்டியதில், கவுதம் சமந்தா என உறுதியானது. பின் அவரது மனைவி டபாலி சமந்தாவுக்கு தகவல் அளிக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின், உடல் அவரது குடும்பத்தினர் வசம், நேற்று முன்தினம் ஒப்படைக்கப்பட்டது.
