/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேற்கு மாவட்ட தி.மு.க.,வினர் சமூக நீதி உறுதிமொழி ஏற்பு
/
மேற்கு மாவட்ட தி.மு.க.,வினர் சமூக நீதி உறுதிமொழி ஏற்பு
மேற்கு மாவட்ட தி.மு.க.,வினர் சமூக நீதி உறுதிமொழி ஏற்பு
மேற்கு மாவட்ட தி.மு.க.,வினர் சமூக நீதி உறுதிமொழி ஏற்பு
ADDED : செப் 18, 2025 02:24 AM
சங்ககிரி :தி.மு.க.,வின், சேலம் மேற்கு மாவட்டம் சார்பில், சங்ககிரி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதி யில், ஈ.வெ.ரா.,வின், 147வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மாவட்ட செயலர் செல்வகணபதி தலைமை வகித்து, ஈ.வெ.ரா., படத்துக்கு மலர்துாவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சமூக நீதி உறுதிமொழி ஏற்றனர். இதில் மேற்கு மாவட்ட துணை செயலர்கள் சம்பத்குமார், சுந்தரம், மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து, தலைமை செயற்குழு உறுப்பினர் பூவாகவுண்டர், நகர செயலர்களான, சங்ககிரி முருகன், இடைப்பாடி பாஷா, இடங்கணசாலை செல்வம், சங்ககிரி ஒன்றிய செயலர் ராஜேஷ், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் நிர்மலா உள்பட பலர் பங்கேற்றனர்.