/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
4 மாத ஊக்கத்தொகை எப்ப கிடைக்கும்? தமிழக பால் உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு
/
4 மாத ஊக்கத்தொகை எப்ப கிடைக்கும்? தமிழக பால் உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு
4 மாத ஊக்கத்தொகை எப்ப கிடைக்கும்? தமிழக பால் உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு
4 மாத ஊக்கத்தொகை எப்ப கிடைக்கும்? தமிழக பால் உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு
ADDED : அக் 29, 2024 01:18 AM
4 மாத ஊக்கத்தொகை எப்ப கிடைக்கும்?
தமிழக பால் உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு
சேலம், அக். 29-
''பால் உற்பத்தியாளர்களுக்கான, 3 ரூபாய் ஊக்கத்தொகை, நான்கு மாதங்களாக வழங்கப்பட
வில்லை,'' என, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க தலைவர் ராஜேந்திரன், சேலத்தில் நிருபர்களிடம் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: தமிழகத்தில் நாமக்கல், மதுரை, கோவை ஒன்றியங்களை தவிர்த்து, சேலம் உள்பட, 24 ஒன்றியங்களில் பால் உற்பத்தியாளர்களுக்கான, 3 ரூபாய் ஊக்கத்தொகை, ஜூலை தொடங்கி, அக்., வரை நான்கு மாதங்களாக வழங்கப்படவில்லை. அத்தொகையை பட்டுவாடா செய்ய, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பால் கொள்முதல் பணம், அதிகபட்சம், 25 நாளில் கிடைத்து விடும். தற்போது, 30 நாட்கள் கடந்தும் வழங்கப்படவில்லை.
ஈரோடு கால்நடை தீவனஆலை சரிவர இயக்கப்படாமல் உள்ளது. அத்துடன், அங்கு உற்பத்தியாகும் தீவனமும் தரமற்று இருப்பதால், வெளிச்சந்தையில் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டி இருப்பதால், கால்நடை விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். பால் விற்பனையில், ஐ.எஸ்.ஐ., தரம் கடைபிடிப்பது போன்று, கொள்முதலில் பின்பற்றாத காரணத்தால், பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு, 60 காசு இழப்பு ஏற்படுகிறது. இந்த தொகையை, ஒன்றியங்களில் உள்ள குறிப்பிட்ட அதிகாரிகள் கொள்ளையடிக்கின்றனர். அதை தடுக்க பால் கொள்முதல் செய்வதிலும், ஐ.எஸ்.ஐ., தரத்தை அமல்படுத்த வேண்டும்.
மேலும், உற்பத்தியாளர்களிடம் பெறப்படும் பால் அளவிலும் முறைகேடு நடக்கிறது. குறிப்பாக ஒரு விவசாயி, 4.200 மி.லிட்டர் பால் வழங்கினால், அதை ஒன்றிய அதிகாரிகள், 4.000 மி.லிட்டர் என கணக்கெழுத்தி, 200 மி.லிட்டர் பால் திருடப்படுகிறது. இதேபோல, ஒவ்வொரு உற்பத்தியாளர்களிடம் பெறப்படும் பாலிலும் முறைகேடு நடக்கிறது. இதை தடுக்க வேண்டும்.
பால் கொள்முதல் விலையில் லிட்டருக்கு தலா. 1.25 ரூபாய் பிடித்தும் செய்து, அத்தொகை பால் உற்பத்தியாளர் சங்க பணியாளர்களுக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது. இந்த சொற்ப ஊதியத்தில், பணியாளர்கள் குடும்பம் நடத்துவது சிரமமாக உள்ளது. எனவே, பிடித்தம் செய்யப்படும் தொகையை, 1.75 ரூபாயாக உயர்த்தி, ஊதியத்தை அதிகரிக்க வேண்டும். பணியாளர்களின் பணி காலத்தையும் கணக்கிட்டு, அதற்கேற்ப புதிய சம்பளம் நிர்ணயிக்க வேண்டும். இது தொடர்பாக கருத்துகேட்பு கூட்டம் நடத்தி, புதிய அரசாணையில் உள்ள குறைகளை களைய வேண்டும்.
இவ்வாறு கூறினார்.