/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பைக்கை மீட்டபோது மற்றொரு பைக் மோதி போலீசார் காயம்
/
பைக்கை மீட்டபோது மற்றொரு பைக் மோதி போலீசார் காயம்
ADDED : அக் 19, 2024 01:10 AM
பைக்கை மீட்டபோது மற்றொரு
பைக் மோதி போலீசார் காயம்
சேலம், அக். 19-
சேலம், பட்டர்பிளை மேம்பாலம் பகுதியில் நள்ளிரவு, ஈரோடு, புதுத்தெருவை சேர்ந்த கார்த்திகேயன், 28, என்பவர் பஜாஜ் சி.டி.100 பைக்கில் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். மேம்பாலம் பகுதியில் வந்த போது, தடுமாறி கீழே விழுந்தார். அன்னதானப்பட்டி ஏட்டுக்கள் பிரபாகரன், ராதாகிருஷ்ணன், ஆகியோர், காயமடைந்த கார்த்திக்கை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின், பைக்கை அப்புறப்படுத்தும் பணியில் ஏட்டு பிரபாகரன் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது, அரியானுரில் இருந்து சேலம் சின்னத்திருப்பதியை சேர்ந்த குணசீலன், 22, என்பவர் யமகா ஆர்.15, பைக்கில் வேகமாக வந்து, பிரபாகரன் மீது மோதி, அருகில் நின்றிருந்த ஏட்டு ராதாகிருஷ்ணன் மீதும் மோதியது. இதில் ராதாகிருஷ்ணனுக்கு கால் முறிவு ஏற்பட்டது. குணசீலன் காயமின்றி தப்பினார்.
அவ்வழியாக சென்றவர்கள் காயமடைந்த ஏட்டுக்கள் இருவரையும் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.