விசில் ஊதிய துணை ராணுவத்தினர் முகவர்கள் சூழ்ந்து வாக்குவாதம்
விசில் ஊதிய துணை ராணுவத்தினர் முகவர்கள் சூழ்ந்து வாக்குவாதம்
ADDED : ஏப் 24, 2026 05:44 AM
சேலம்: சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதி ஆட்டை-யாம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஓட்-டுச்சாவடி மையத்தில் நேற்று வாக்காளர்கள், ஓட்டுகளை பதிவு செய்து கொண்டிருந்தனர்.
அங்கு வடமாநிலங்களில் இருந்து வரவழைக்-கப்பட்ட துணை ராணுவத்தினர், தேர்தல் பாது-காப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை, 11:30 மணிக்கு, ஓட்டுப்போட்ட பலர், வரிசையில் நின்-றவர்களிடம் பேச்சு கொடுத்தபடி கூட்டமாக நின்றிருந்தனர்.இதை பார்த்த துணை ராணுவத்தை சேர்ந்த துப்பாக்கி ஏந்திய இருவர், விசிலை ஊதி சத்தம் எழுப்பி கூட்டத்தை கலைக்க முயன்றனர். சத்தம் கேட்டு, ஓட்டுச்சாவடியில் இருந்த அரசியல் கட்சி முகவர்கள், வெளியே வந்தபோது, துணை ராணு-வத்தினர் ஊதுவதை பார்த்து அதிர்ச்சி
அடைந்தனர்.
பின் அவர்களை, முகவர்கள் சூழ்ந்து வாக்கு-வாதத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, 'மறைமுக-மாக ஒரு கட்சிக்கு சாதமாக பிரசாரம் செய்கி-றீர்களா' என கேள்வி எழுப்பினர். உடனே உள்ளூர் போலீசார், 'இங்கு விசில் சின்னத்தில் ஒரு கட்சி போட்டியிடுகிறது' என
கூறினர்.
மேலும், 'இனி விசில் ஊதாமல் நேரடியாக சென்று கூட்டத்தை கலையுங்கள்' என அறிவு-றுத்தப்பட்டது. பின் முகவர்கள் சமாதானம் அடைந்து சென்றனர்.
