தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ இடைப்பாடியில் யாருக்கு?

இடைப்பாடியில் யாருக்கு?

இடைப்பாடியில் யாருக்கு?


ADDED : மார் 29, 2026 02:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 02:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இடைப்பாடி வேட்பாளராக, ஜலகண்டாபுரம் டவுன் பஞ்சாயத்தில், நீண்ட காலமாக தலைவராக உள்ள காசிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜவுளி தொழில் செய்து வரும் இவர், 2006 - 10 வரை, தி.மு.க., ஆட்சியில், தலைவராக இருந்த காலத்தில், தலைவருக்கான அமர்வு படியாக அரசு வழங்கிய, 34,578 ரூபாயை, தி.மு.க.,வின் கட்சி வளர்ச்சிக்கு கொடுத்தார். 2021ல், இத்தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் சம்பத்குமார் போட்டியிட்டு, இ.பி.எஸ்.,சிடம் தோல்வி அடைந்தார். அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்காமல், இ.பி.எஸ்.,சை எதிர்கொள்ள, 'செல்வாக்கு' உள்ள வேட்பாளரை, தி.மு.க., தலைமை களம் இறக்கியுள்ளது.

சேலம் மாவட்ட தி.மு.க., வேட்பாளர்கள் விபரம்

சேலம் வடக்கு

பெயர் : ஆர்.ராஜேந்திரன்

வயது : 67

படிப்பு : பி.ஏ., பி.எல்.,

ஜாதி : வன்னியர்

தொழில் : விவசாயம்,

அரசியல்வாதி

குடும்பம்: மனைவி, மகள்

அரசியல் அனுபவம்: 2016 முதல், சேலம் மத்திய மாவட்ட தி.மு.க., செயலர்; 2006 முதல், 2011 வரை, அப்போதைய பனமரத்துப்பட்டி தொகுதி, எம்.எல்.ஏ., 2016 முதல், 2026 வரை, சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.,

கிடைத்தது எப்படி: 2024 செப்டம்பர் முதல்,

சர்ச்சைக்கு ஆளாகாமல் சுற்றுலாத்துறை

அமைச்சராக செயல்படுவது.

சேலம் தெற்கு

பெயர் : எம்.லோகநாதன்

வயது : 70

படிப்பு : பிளஸ் 2

ஜாதி : முதலியார்

தொழில் : சேலம் பொறியியல்

மற்றும் தொழில்

நுட்ப கல்லுாரி

தலைவர்

குடும்பம் : மனைவி, மகன், மகள்

அரசியல் அனுபவம்: மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளராக இருந்தார். கடந்த, 5 ஆண்டாக பொதுக்குழு உறுப்பினராக உள்ளார்.

கிடைத்தது எப்படி: சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆதரவு இருப்பது.

வீரபாண்டி

பெயர் : ஆ.கா.தருண்

வயது : 45

படிப்பு : எம்.பி.பி.எஸ்.,

எம்.எஸ்.ஆர்த்தோ,

ஜாதி : வன்னியர்

தொழில் : மருத்துவர்

குடும்பம் : மனைவி, 2 மகள்

அரசியல் அனுபவம்: தி.மு.க.,வின் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலர். 2024 லோக்சபா தேர்தலில் தர்மபுரி தொகுதி பொறுப்பாளர்.

கிடைத்தது எப்படி: முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மூத்த மகனான, மறைந்த நெடுஞ்செழியனின் மருமகன். எம்.பி., செல்வ

கணபதியுடன் நெருக்கமாக இருப்பது.

இடைப்பாடி

பெயர் : சி.காசி

வயது : 65

படிப்பு : 10ம் வகுப்பு

ஜாதி : கொங்கு வேளாளர்

தொழில் : ஜவுளி, விவசாயம்

குடும்பம் : மனைவி, மகன்கள்

அரசியல் அனுபவம்: தலைமை செயற்குழு முன்னாள் உறுப்பினர். 2006 - 2011 மற்றும் 2022 முதல் தற்போது வரை, ஜலகண்டாபுரம் டவுன் பஞ்சாயத்து தலைவர்.

கிடைத்தது எப்படி: முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளர். அமைச்சர் செந்தில்பாலாஜி ஆதரவும் உள்ளது.

சங்ககிரி

பெயர் : மு.மணிகண்டன்

வயது : 37

படிப்பு : பி.ஏ., பி.எல்.,

ஜாதி : வன்னியர்

தொழில் : ஜவுளி

குடும்பம் : மனைவி,

மகன், மகள்

அரசியல் அனுபவம்: 2007 முதல், தி.மு.க.,வில் உறுப்பினர். தற்போது சேலம் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்.

கிடைத்தது எப்படி: இளைஞரணி அமைப்பாளராக உள்ளதால் துணை முதல்வர் உதயநிதியிடம் நெருக்கமாக இருப்பது.

மேட்டூர்

பெயர் : ம.மிதுன்சக்ரவர்த்தி

வயது : 36

படிப்பு : பி.இ., சிவில்

ஜாதி : வன்னியர்

தொழில் : விவசாயம், அரசியல்

குடும்பம் : மனைவி, மகன்

அரசியல் அனுபவம்: தந்தை மணி, கொளத்துார் ஒன்றிய செயலராக இருந்தபோது உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், 2020ல் மிதுன்சக்ரவர்த்தி ஒன்றிய அமைப்பாளராக இருந்து பின், ஒன்றிய செயலராக நியமிக்கப்பட்டார்.

கிடைத்தது எப்படி: சேலம் எம்.பி.,

செல்வகணபதி உறவினராக இருப்பது.

கெங்கவல்லி(தனி)

பெயர் : கு.சின்னதுரை

வயது : 60

படிப்பு : பி.இ., எம்.இ.,

ஜாதி : ஆதிதிராவிடர்

தொழில் : விவசாயம்

குடும்பம் : மனைவி, மகன், மகள்

அரசியல் அனுபவம்: 2006ல், தலைவாசல் தொகுதி, தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக வெற்றி; 2011ல், கெங்கவல்லியில் தோல்வி; 2021ல் ஆத்துாரில் தோல்வி; தற்போது சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலர்.

கிடைத்தது எப்படி: பொறுப்பு அமைச்சர்களான நேரு, வேலுவுடன் நெருக்கமாக இருப்பது.

ஏற்காடு(தனி)

பெயர் : டி.எம்.ரேவதி

வயது : 44

படிப்பு : பி.எஸ்சி., பி.எட்.,

ஜாதி : பழங்குடியினர்

தொழில் : தனியார் பள்ளி

ஆசிரியை

குடும்பம் : கணவர், மகன்,

மகள்

அரசியல் அனுபவம்: சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க.,வில் மகளிர் அணி துணை

அமைப்பாளராக உள்ளார்

கிடைத்தது எப்படி: சர்ச்சைக்கு ஆளாகாமல் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்தும், அனுசரித்தும் பணியாற்றுவது.

தே.மு.தி.க., வேட்பாளர்கள்

சேலம் மேற்கு

பெயர் : ஆர்.மோகன்ராஜ்

வயது : 72

படிப்பு : பி.எஸ்சி.,

ஜாதி : வன்னியர்

தொழில் : விவசாயம்

குடும்பம் : மனைவி,

மகன், மகள்

அரசியல் அனுபவம்: 1986ல் அழகாபுரம் ஊராட்சி தலைவர். 2011 முதல், 2016 வரை சேலம் வடக்கு தொகுதி, எம்.எல்.ஏ., தற்போது, தே.மு.தி.க., மாநில கொள்கை பரப்பு செயலர்.

கிடைத்தது எப்படி: நீண்ட காலமாக கட்சியில் இருப்பவர். மாநில கொள்கை பரப்பு செயலர் பொறுப்பில் இருப்பது.

ஓமலுார்

பெயர் : ஏ.ஆர்.இளங்கோவன்

வயது : 60

படிப்பு : 8ம் வகுப்பு

ஜாதி : நாயுடு

தொழில் : அரசியல்

குடும்பம் : மனைவி, மகன்

அரசியல் அனுபவம்: 2005ல் சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர்; 2006ல் ஆத்துார் தொகுதியில் தோல்வி; 2011ல் சேலம் மேயர் தேர்தலில் தோல்வி; 2016ல் ஓமலுார் தொகுதியில் தோல்வி. தற்போது கட்சியில் சேலம் கிழக்கு மாவட்ட செயலர்.

கிடைத்தது எப்படி: கட்சியில் நீண்ட காலமாக மாநில நிர்வாகியாக உள்ளார். தலைமைக்கு நெருக்கமாக இருப்பது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us