/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கள்ளக்காதலுக்கு இடையூறு செய்த கணவனை கொன்ற மனைவி கைது
/
கள்ளக்காதலுக்கு இடையூறு செய்த கணவனை கொன்ற மனைவி கைது
கள்ளக்காதலுக்கு இடையூறு செய்த கணவனை கொன்ற மனைவி கைது
கள்ளக்காதலுக்கு இடையூறு செய்த கணவனை கொன்ற மனைவி கைது
ADDED : செப் 30, 2025 08:06 AM
ஏற்காடு; கள்ளக்காதலுக்கு இடையூறு செய்த கணவனை கொலை செய்த மனைவி உட்பட, மூவரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், ஏற்காடு அருகே மோட்டு காடு கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார், 36; எலக்ட்ரீஷியன். இவரது மனைவி மாராயி. இவர்களுக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர்.
சிவக்குமார் நேற்று முன்தினம் இரவு, 7:30 மணியளவில் வாழ வந்தி ஆரம்ப சுகாதாரம் நிலையம் அருகே, மலைப்பாதை ஓரத்தில் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். ஏற்காடு போலீசார் விசாரித்தனர்.
இதில், மாராயி, ஏற்காடு, மருதயங்காடு கிராமத்தை சேர்ந்த சந்தோஷ், 21, என்பவருடன் கள்ளத்தொடர்பில் இருந்தது சிவக்குமாருக்கு தெரிந்ததால், தம்பதியர் இடையே அடிக்கடி பிரச்னை வந்துள்ளது.
கள்ளத்தொடர்புக்கு சிவக்குமார் இடையூறாக இருப்பதால், அவரை கொலை செய்ய மாராயி, சந்தோஷ் திட்டம் தீட்டியுள்ளனர்.
நேற்று முன்தினம் குப்பனுார் சந்தைக்கு சென்று வீடு திரும்பிய சிவக் குமாரை, சந்தோஷ், அவரது நண்பர்கள் அண்ணாமலை, 21, தினேஷ் ஆகியோர் இரும்பு ராடால் தலையில் அடித்து கொலை செய்தது தெரிந்தது.
சந்தோஷ், அண்ணாமலை, மாராயி ஆகியோரை ஏற்காடு போலீசார் கைது செய்தனர். தினேஷை தேடி வருகின்றனர்.