ADDED : செப் 26, 2026 05:42 AM
சேலம்; சேலம் மாவட்ட வனத்துறை சார்பில், அக்டோபர் முதல் வாரம் வன உயிரின வார விழா கொண்-டாடப்பட உள்ளது. இதனால் அனைத்து பள்ளி மாணவ, மாணவியருக்கு, 'வாழ்விடங்களை இணைத்தல் மற்றும் செழித்தோங்குதல்' எனும் கருப்பொருள் தலைப்பில் ஓவிய போட்டி, 'பிளாஸ்டிக் இல்லாத பாதுகாக்கப்பட்ட பகுதிகள்' பெயரில் துாய்மை முகாம், சேலம் ஜெய்ராம் பப்ளிக் பள்ளியில், அக்., 3 காலை, 10:30 முதல் மாலை, 4:00 மணி வரை நடக்க உள்ளது.
இதில் வெற்றி பெறுவோருக்கு, மாவட்ட அளவில் பரிசுகள், சான்றிதழ் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்போர், பொறுப்பாசிரியர் உத-வியுடன் பங்கேற்கலாம். அதற்கு, salemsouthrange@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, அக்., 2க்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகவலுக்கு, சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலரை, 88701 - 14906 என்ற எண்ணில் அழைக்கலாம் என, மாவட்ட வன அலுவலர் அம்புல்கர் யஷ்வந்த் ஜக்திஷ் தெரி-வித்துள்ளார்.
