/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இருளில் தாலுகா அலுவலகம் மின் வாரியம் கவனிக்குமா?
/
இருளில் தாலுகா அலுவலகம் மின் வாரியம் கவனிக்குமா?
ADDED : ஆக 24, 2025 01:47 AM
ஆத்துார் ஆத்துார் தாலுகா அலுவலக வளாகத்தில் செயல்பட்ட, மாவட்ட சிறை, வங்கதேசத்தினர் முகாமாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது, 9 குழந்தைகள், 20 பெண்கள் உள்பட, 81 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் முகாமின் மின் இணைப்பு பழுதாகி இருள் சூழ்ந்தது. இதனால் தாலுகா அலுவலக மின் இணைப்பில் இருந்து ஒயர் அமைத்து மின் வினியோகம் வழங்கப்பட்டுள்ளது.
முகாமில் உள்ளவர்கள், மின்சார அடுப்பு உள்ளிட்ட சாதனங்களை பயன்படுத்துவதால், தாலுகா மின் இணைப்பில் பழுது ஏற்பட்டது. இதனால் தாசில்தார் அறை, வெளிப்புற அறைக்கு மட்டும் மின் இணைப்பு வழங்கி, மீதி இணைப்பு
கள் துண்டிக்கப்பட்டுள்ளன. மாலை, 6:00 மணிக்கு மேல், தாலுகா அலுவலக வெளிப்புறம், மற்ற பிரிவு அலுவலகங்களில் மின் இணைப்பு இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
தாசில்தார் பாலாஜி கூறியதாவது: கணினிக்கு மின்சாரம் இல்லாமல் வருவாய்த்துறையினர் வருத்தப்படுகின்றனர். வங்கதேச முகாமில், விறகு அடுப்புக்கு பதில் மின்சார அடுப்பு பயன்படுத்துவதால் மின்தேவை அதிகரித்துள்ளது. ஒயரால் தான் மின் பாதிப்பு ஏற்பட்டது. வரும், 25ல் சரிசெய்வதாக மின்வாரிய அலுவலர்கள் கூறியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.