/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காற்றாலை மின் உற்பத்தி மாலையில் அதிகரிப்பு
/
காற்றாலை மின் உற்பத்தி மாலையில் அதிகரிப்பு
ADDED : மே 09, 2024 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
- நமது நிருபர் -
தமிழக காற்றாலைகள் மூலம் தினமும் அதிகபட்சம், 8,924 மெகாவாட், அனல்மின் நிலையங்கள் மூலம், 5,120 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். தற்போது கோடைகாலம் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாலையில் காற்றின் வேகம் அதிகம் உள்ளது.கடந்த, 6 மாலை, 2,412 மெகாவாட்டாக இருந்த காற்றாலை மின் உற்பத்தி, நேற்று முன்தினம் மாலை, 2,775 மெகாவாட்டாக உயர்ந்தது. அதேநேரம் நேற்று முன்தினம் காலை, 607 மெகாவாட்டாக இருந்த காற்றாலை மின் உற்பத்தி நேற்று காலை, 69 மெகாவாட்டாக குறைந்தது.