/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முதல்வர் படத்துடன் 'டி-சர்ட்' அணிந்து மது விற்பனை; தி.மு.க., உறுப்பினர் கைது

ADDED : பிப் 11, 2025 07:30 AM
கெங்கவல்லி: தம்மம்பட்டி வாரச்சந்தையில், முதல்வர், துணை முதல்வர் படத்-துடன் 'டி-சர்ட்' அணிந்து மதுபாட்டில் விற்பனை செய்த வீடியோ வெளியான நிலையில், போலீசார் அவரை கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி வாரச்சந்தை வளாகத்தின் அரச மரத்தடியில், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி படம் உள்ள, 'டி-சர்ட்' அணிந்த நபர் மதுபாட்டில்களை விற்-பனை செய்யும்
வீடியோ, நேற்று வைரலானதால், அவர் மீது நட-வடிக்கை எடுக்கும்படி, சேலம் எஸ்.பி., கவுதம்கோயல்
உத்தர-விட்டார். விசாரணையில், தம்மம்பட்டி டவுன் பஞ்சாயத்து, 15வது வார்டு நடராஜ், 46, என்பதும்,
தி.மு.க., உறுப்பினராக உள்-ளதும் தெரியவந்தது. தம்மம்பட்டி போலீசார், நேற்று நடராஜை கைது
செய்தனர். அதேபோல், கெங்கவல்லி அருகே, கூடமலை கிராமத்தில் மது விற்பனை செய்த சக்திவேல்,
50, என்பவரை கெங்கவல்லி போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து, சேலம் எஸ்.பி., கவுதம்கோயல் கூறுகையில், ''தம்-மம்பட்டி வாரச்சந்தையில்
மதுபாட்டில்கள் விற்கும் வீடியோ குறித்து, ஆத்துார் டி.எஸ்.பி., விசாரணை செய்துள்ளார். சில
தினங்-களுக்கு முன், விடுமுறை நாளில் மதுவிற்றபோது வீடியோ எடுத்து, தற்போது
வெளியிட்டுள்ளனர்,'' என, தெரிவித்தார்.