ADDED : ஜூன் 18, 2026 04:37 AM
அ நிறம் | அளவு
சேலம்; சேலம், அம்மாபேட்டை, ரஷ்யா காலனியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 32. 'கன்ஸ்ட்ரக்ஷன்' நிறுவனம் நடத்துகிறார். அதே பகுதியில் தனசே-கரன் என்பவருக்கு, புது வீடு கட்டி வந்தார். அங்கு கடந்த மே, 20 இரவு, வீட்டை பூட்டிவிட்டு, மீண்டும், 23ல் வேலை செய்ய வந்தார்.
அப்போது கதவு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த, 30,000 ரூபாய் மதிப்பிலான, எலக்ட்ரிக்கல் ஒயரிங் பொருட்கள் திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்த புகார்படி, அம்மா பேட்டை போலீசார் விசாரணையில், குஞ்சான்காட்டை சேர்ந்த மஜித், 27, திருடியது தெரிந்தது. அவரை, நேற்று போலீசார் கைது செய்தனர்.
