/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வண்டி ஓட்டும்போது எட்டிப்பார்த்த பாம்பு மொபட்டை போட்டுவிட்டு பெண் ஓட்டம்
/
வண்டி ஓட்டும்போது எட்டிப்பார்த்த பாம்பு மொபட்டை போட்டுவிட்டு பெண் ஓட்டம்
வண்டி ஓட்டும்போது எட்டிப்பார்த்த பாம்பு மொபட்டை போட்டுவிட்டு பெண் ஓட்டம்
வண்டி ஓட்டும்போது எட்டிப்பார்த்த பாம்பு மொபட்டை போட்டுவிட்டு பெண் ஓட்டம்
ADDED : ஆக 20, 2025 01:29 AM
ஆத்துார், ஆத்துார், வடக்கு உடையார்பாளையம், லட்சுமி
புரத்தை சேர்ந்த முருகேசன் மனைவி பூர்ணிமா, 35. இவர் நேற்று காலை, 11:50 மணிக்கு காமராஜர் சாலை வழியே, 'டி.வி.எஸ்., - எக்ஸ்.எல்.,' மொபட்டில் காமராஜர் சிலை எதிரே சென்று கொண்டிருந்தார். அப்போது மொபட்டின், 'வீல் செயின்' பகுதியில் இருந்து பாம்பு எட்டிப்பார்த்துள்ளது.
வண்டியில் ஏதோ ஊர்வது போன்று உணர்ந்த பூர்ணிமா, சீட் கவரின் செயின் கவர் பகுதியில் பார்த்தார். அப்போது பாம்பு இருப்பதை பார்த்து பதறிய அவர், மொபட்டை அவசரமாக நிறுத்த முயன்று கீழே போட்டுள்ளார். பின் அலறித்துடித்த அவரிடம், மக்கள் கேட்டபோது, மொபட்டில் பாம்பு இருப்பதாக கூறினார். மக்கள் பார்த்தபோது, பாம்பு மீண்டும் செயின் கவருக்குள் சென்றது.
உடனே ஆத்துார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. மதியம், 12:20 மணிக்கு அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கருவி உதவியுடன், பைக்கின் அடிப்பகுதியில் இருந்த, 4 அடி நீள, கொம்பேரி மூக்கனை, அரை மணி நேரத்துக்கு பின் உயிருடன் பிடித்து, ஆத்துார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
ப்ரிட்ஜில் நாகப்பாம்பு
அதேபோல் ஆத்துார்,
முல்லைவாடி, உப்பு ஓடையை சேர்ந்த, சாமிதுரை மனைவி ராணி, 40. இவரது வீட்டில் உள்ள ப்ரிட்ஜில் பாம்பு இருப்பதாக, நேற்று காலை, ஆத்துார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற வீரர்கள், கருவி உதவியுடன், ப்ரிட்ஜ் அடிப்பகுதியில் இருந்த, 4 அடி நீள நாக பாம்பை உயிருடன் பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் கெங்கவல்லி, இந்திரா காலனியை சேர்ந்த வேணுகுமார், 50, வீட்டில், நேற்று மதியம், 5 அடி நீள சாரை பாம்பு இருந்தது. கெங்க
வல்லி தீயணைப்பு துறையினர் உயிருடன் பிடித்து, கெங்கவல்லி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.]]