தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பெண் தற்கொலை: கள்ளக்காதலன் கடை சூறை

பெண் தற்கொலை: கள்ளக்காதலன் கடை சூறை

பெண் தற்கொலை: கள்ளக்காதலன் கடை சூறை


ADDED : செப் 16, 2026 06:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2026 06:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாரமங்கலம்:தாரமங்கலம், துட்டம்பட்டி அருகே தெசவிளக்கை சேர்ந்த தச்சு தொழிலாளியின் மனைவி சத்யா, 36. இவருக்கு ஒரு மகள், மகன் உள்ளனர்.

இவர்கள் குடியிருக்கும் மாடியின் கீழ், கோவிந்தராஜ், 30, என்பவர், 'டிபார்மென்ட் ஸ்டோர்' நடத்துகிறார். இவருக்கும், சத்யாவுக்கும், 'பழக்கம்' ஏற்பட, தொழிலாளி கண்டித்துள்ளார். இதில் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மதியம், வீட்டில் சத்யா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.இச்சம்பவத்தை அறிந்த, சத்யாவின் உறவினர்கள், கோவிந்தராஜின் டிபார்மென்ட் ஸ்டோரை அடித்து உடைத்து பொருட்களை எடுத்து வெளியே வீசினர். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us