ADDED : செப் 30, 2025 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் சோளம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ், 43. இவரது மனைவி தேவி, 33. மது பழக்கம் கொண்டவர் வெங்கடேஷ். இதனால், இதனால் தம்பதியர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் தேவி கோபித்து கொண்டு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன், தேவிக்கு காய்ச்சல், ஊட்டச்சத்து குறைபாடு பாதிப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் வீட்டில் தேவி மயங்கி கிடந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே, தேவி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.